*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Friday, June 14, 2013

அக்கரைப்பற்று சுனாமி அகதிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம்களுக்காக சவூதி அரேபிய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை இன்று (ஜூன் 14) கையளிப்பதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்திருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
 
இம் மக்களுக்காக வழங்கும் பொருட்டு  சவூதிஅரேபிய அரசாங்கத்தினால் நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட 500 வீடுகள் இதுவரையில் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.
 
இம் மக்கள் தமக்கான இருப்பிடங்கள் இல்லாது பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாக இல்லையெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
அண்மையில் பாதிக்கபட்ட மக்கள் பிதேச செயலகத்தில் நடத்திய போராட்டத்தின் போது பிரதேச செயலாளரினால் மாவட்ட செயலாளரின் வாக்குறுதிக்கு அமைய எதிர்வரும் 14ம் திகதி அதாவது (இன்று) பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் கையளிக்கப்படும் என எழுத்து மூலமான வாக்குறுதி வழங்கப்படிருந்தது. 
 
இருப்பினும் இவ் வாக்குறுதிக்கு அமைய எந்தவிதமான நடவடிக்கையும் இடம் பெறாததனை அடுத்து மக்கள் நேற்று பிரதேச செயலகத்தில் கூடி தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறும், தங்களை தொடர்ந்தும் ஏமாற்றும் நடவடிக்கையை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
 
இதேவேளை இன்றைய தினம் பிரதேச செயலாளர் அவ்விடத்திற்கு சமூகம் கொடுத்திருக்கவில்லை. 
 
.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

Definition List

Unordered List

Free counters!

Support