*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Wednesday, September 11, 2013

30 வருடங்களின் பின் புக்குளத்திற்கு வாக்களிப்பு நிலையம்

30 வருடங்களின் பின் புக்குளம் மீனவர் கிராமத்தில் முதல் முறையாக வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படுவதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்சிலி பெனாண்டோ தெரிவித்துள்ளார். 


புத்தளம் மாவட்டத்தில் வடக்கு முனையில் உள்ள இறுதி கிராமம் இதுவாகும். 

யுத்தம் காரணமாக புக்குளம் கிராமத்தில் வசித்த மக்கள் கல்பிட்டி - குறிஞ்சங்பிட்டி கிராமத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். 

யுத்தம் முடிந்த பின் தமது கிராமத்திற்குச் சென்று பதிவாகியுள்ள மக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் புக்குளம் மீனவர் கிராமத்தில் வாக்களிப்பு மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கிங்சிலி பெனாண்டோ குறிப்பிட்டார். 

இதன்மூலம் புக்குளம் பகுதி மக்களின் வாக்குரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

Definition List

Unordered List

Free counters!

Support