ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் உலமா சபை நடந்துகொண்ட விதம் திருப்தியளிக்கவில்லை என்று எம்மால் கூற முடியாது. காரணம் உலமா சபை இந்த இடத்தில் அச்சுறுத்தலின் கீழேயே செயற்பட்டுள்ளது என முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
உலமா சபை சர்வதேசத்துக்கான பொருட்கள் உட்பட அனைத்துக்குமான ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை முழுமையாக நிறுத்தியிருந்தால் வர்த்தக நிறுவனங்கள் பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் பதில் கூறியிருக்கும்.
இந்நிலையில் அடுத்ததாக பொது பலசேனா முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறப்போகின்றதாம். இந்த நாட்டில் நாங்கள் உடை ஒன்றை அணிவதற்கான மனித உரிமை கூட இல்லையா ?
ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் உலமா சபை நடந்துகொண்ட விதம் திருப்தியளிக்கவில்லை என்று எம்மால் கூற முடியாது. காரணம் உலமா சபையானது இச்சந்தர்ப்பத்தில் அச்சுறுத்தலின் கீழேயே செயற்பட்டுள்ளது. நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறியதைப்போன்று ஹலால் செயற்பாட்டிலிருந்து நாங்கள் முழுமையாக விலகியிருக்கலாம். காரணம் எவ்வாறு ஹலால் உணவை உண்பது என்று எங்களுக்குத் தெரியும்.
எனவே ஹலால் சான்றிதழ் செயற்பாட்டிலிருந்து முழுமையாக விலகியிருந்தால் பொதுபல சேனாவுக்கும் ஹெல உறுமயவுக்கும் இலங்கையில் உள்ள வர்த்தக நிறுவனங்களே பதிலளித்திருக்கும். தற்போதைய நிலைமையில் ஹலால் சான்றிதழ் இல்லாமல் சவூதிக்கு ஏற்றுமதி செய்யப்பட பொருட்களடங்கிய இரு கொள்கலன்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கும் பொதுபல சேனாவும் ஹெல உறுமயவுக்கும் விருப்பம் இல்லையாம். அத்துடன் அடுத்தகட்டமாக பொது பலசேனா முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா அணிய முடியாது என கூறப்போகின்றதாம். அப்படியானால் இந்த நாட்டில் மக்கள் எவ்வாறான ஆடை ஒன்றை அணிவது என்று தீர்மானிக்கும் சுதந்திரம் கூட இல்லையா? என்று கேட்கின்றோம். என தெரிவித்துள்ளார்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment