இலங்கைக்கு எதிராக ஜெனீவா, ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மனித உரிமை அமைப்பான சுவராம் அமைப்பின் தலைவர் கே.ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, இலங்கை விடயத்தில் மலேசியா குருட்டுக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் .
யுத்தத்தில் இலங்கையில் 10,000ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதுள்ளதுடன் பலர் இன்னும் முகாம்களில் வசிகின்றனர்.
இலங்கை மனித உரிமை மேம்பாட்டு விடயங்களில் திருப்தி அடைய முடியாது என ஐநா மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது . இலங்கையில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் மலேசியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் .
இலங்கையில் தமிழர்களுக்குப் பின்னர் புதிதாக முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் இவ்வாறான இன்னல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மலேசியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 8 முஸ்லிம் பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளதாவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment