பொது பல சேனா அமைப்புக்கு நிதி சேகரிக்கும் விதமாக புதிய நிதி மார்க்கமொன்று இன்று பாணந்துறையில் நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
மொபிடெல் தொலை பேசி வலையமைப்பினூடாக குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையினை பொது பல சேனா திட்டமிட்டுள்ளது.
மொபிடெல் தொலை பேசி வலையமைப்பினூடாக குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையினை பொது பல சேனா திட்டமிட்டுள்ளது.
இன்று பாணந்துறையில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில், குறித்த தொலைபேசி வலையமைப்பில் பொது பல சேனா வின் பாடலை அழைப்பு மணியாக தரவிறக்கம் செய்து பொது பல சேனாவுக்கு நிதிப் பங்களிப்பு செய்யுமாறு அவ்வமைப்பின் தேரர் ஒருவரால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த தொலைபேசி நிறுவனத்தின் பிரதி நிதிகளும் அங்கு வருகை தந்திருந்த நிலையில், உடனடியாக மொபிடெல் சிம் அட்டைகளை பெற்று பங்களிப்பு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு மணி தரவிறக்கம் செய்யப்படும் போது 30 ரூபாய் அறவிடப்படுவதுடன் அத்தொகை முழுமையாகவே பொது பல சேனாவுக்கு கையளிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment