*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Saturday, May 11, 2013

அஸாத் சாலி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு கோரப்படவில்லை : சட்டத்தரணி

சத்திய கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு அசாத் சாலி எழுதிய கடிதத்தில் சட்டத்தை நிலைநாட்டுமாறு மட்டுமே கோரப்பட்டிருந்ததாகவும் மன்னிப்பு எதுவும் கோரப்படவில்லை எனவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் தெரிவித்தார்.



இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ,
அஸாத் சாலி சத்தியக்கடதாசிக்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் அனுப்பிவைத்தார். எனினும் அதில் எங்கும் மன்னிப்பு கோரப்படவில்லை. எனினும் பாதுகாப்பு தரப்பு அஸாத் சாலி மன்னிப்புக்கோர வேண்டுமென பிடிவாதமாக இருந்தது. எனினும் அதனை நாங்கள் நிராகரித்தோம். ஜனாதிபதிகக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சத்தியக்கடதாசியின் படி நீதியை நிலைநாட்டுமாறு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மன்னிப்புக்கோரும் எந்தவிதமான வாசகமும் இல்லை.
 
 மாற்றமாக இந்தியாவில் தான் வழங்கிய செவ்வியானது குறித்த ஊடகத்தால் சற்று வித்தியாசப்படுத்தி வெளியிடப்பட்டதாகவும் அது எவரையும் புண்படுத்தியிருந்தால் தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக மட்டுமே அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது என தெரிவித்தார்.
.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support