*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Saturday, May 18, 2013

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி அசாத் சாலியும் ஜனாதிபதிக்கு கடிதம்


பௌத்த தீவிரப்போக்காளர்களின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள பலாங்கொடை ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
.
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும் இதுவிடயமாக நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே அசாத் சாலியும் இக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெய்லானி பள்ளிவாசலானது இலங்கை முஸ்லிம்களின் மிகப் பழமைவாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். எனினும் இந்த இடமானது இன்று பௌத்த கடும்போக்காளர்களின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியும் ஜெய்லானி விவகாரம் தொடர்பில் தங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இருப்பினும் அக் கடிதம் அனுப்பப்பட்டு ஒரு மாதமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் தங்களால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கு முன்னராகவும் அது தொடர்பில் நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். இருப்பினும் தங்களது அரசாங்கத்தினால் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நடவடிக்கைகள்  தொடர்வதானது இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்பதையே நிரூபிப்பதாகவுள்ளது. அத்துடன் இவ்வாறான செயல்கள் உங்கள் அரசாங்கத்தினால் நாட்டில் சமாதானமான சூழலைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.
ஜெய்லானி பிரதேசத்தில் அமைந்திருந்த சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த (ஹிஜ்ரி 300 ) வரலாற்றைப் பறைசாற்றும் கல் ஒன்றும் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இம் மாதம் 18 ஆம் திகதி பொது பல சேனாவினர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாகச் சென்று அங்கு சிலை ஒன்றை நிறுவவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தாங்கள் உடனடிக் கவனம் எடுத்து ஜெய்லானி புனித வழிபாட்டுத் தலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரி அசாத் சாலி மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support