வங்காள விரிகுடாவிற்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் "மஹசென்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது கிழக்கு கடற்பரப்பில் இருந்து வடமேல் திசையை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த திணைக்களம் பொத்துவிலில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசையில் மணிக்கு 300
கிலோமீற்றர் வேகத்தில் புயல் பயணிப்பதால், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கரையோரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் மீ ன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை
தவிர்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
இதேவேளை வங்காள விரிகுடாவிற்கு அருகில் நிலைகொண்டுள்ள சூறாவளி, கிழக்கு கடற்பரப்பில் இருந்து 900 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment