கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்ட வழக்கு தொடர்பிலேயே கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் ஆகியோரை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சனினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
174 வீடுகளை கொண்ட இந்த சுனாமி வீட்டுத் திட்டத்தின் கழிவினை அகற்றுவதற்கான திரிட்மன் பிளானட் எனும் இயந்திரத்தை இயக்குவது தொடர்பில் கடந்த பல வருடங்களாக சர்ச்சை நிலவுகின்றது.
இதனால் குறித்த சுனாமி வீட்டுத் திட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்தே கல்முனை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முறைப்பாட்டாளர் சார்பாக சட்டத்தரணி எம்.ஹாதீம் மற்றும் குடியிறுப்பாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment