குறித்த சந்தேக நபர் இன்னொருவருடன் மதுபோதையில் முச்சக்கர வண்டி ஒன்றை ஓட்டிச் சென்றவேளை குருணாகல் பிரதாண வீதியில் கடமையில் நின்றிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அவர்களுடைய முச்சக்கர வண்டியிலேயே பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துகொண்டிருந்த வேளை, அவர்களில் ஒரு சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி சிகிச்கைளுக்காக அநுரதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக, கைதுசெய்யப்பட்டுள்ள மற்ற சந்தேக நபரிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளதாகவும் தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment