*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Wednesday, August 12, 2015

நாளை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு

Image result for election department sri lanka 2015நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. 

நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் வேகத்திற்குதெரிவித்தார். 

இதேவேளை சட்டத்தை மீறி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இது தவிர வேட்பாளர்களினால் அவர்களின் தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் எதிர்வரும் 15ம் திகதியுடன் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

15ம் திகதிக்குப் பின்னர் மாவட்டத்தில் வேட்பாளருக்கு ஒரு காரியாலயத்தை மட்டும் திறந்தருக்க அனுமதி இருப்பதுடன் அதில் போஸ்டர்கள் மற்றும் கட்அவுட் போன்றவை காட்சிப்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support