*** எமது www.veaham.tk இற்கு வருகை தந்த உங்களை வரவேற்கின்ரோம் *** உங்கள் விளம்பர தொடர்புகளுக்கு fastalert7@gmail.com *** www.veaham.tk ***

Saturday, February 23, 2013

கொட்டகலை 60 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கொள்ளை சந்தேகநபர் பலி

கொட்டகலை 60 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கொள்ளை சந்தேகநபர் பலிகொழும்புப் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கொட்டகலை பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் ஊடாக பொலிஸார் அழைத்துச் சென்ற போது உயரமான பாலத்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்ற சந்தேக நபர் உயிரிழந்த சம்பவமொன்று 21 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. 

குறிப்பிட்ட சந்தேக நபரைக் கைது செய்த தலாங்கம பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதன் பின்பு சந்தேகநபர் தெரிவித்த தகவலொன்றைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கொட்டகலைப் பிரதேசத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். 

ஹட்டன் ரயில் நிலையத்துக்கும் கொட்டகலை ரயில் நிலையத்துக்குமிடையிலுள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்டத்துக்கு அருகிலுள்ள 60 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார். 

60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சடலம் நாவலப்பிட்டி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Share:

0 உங்கள் கருத்துக்கள்:

Post a Comment

Member
Powered By: BWidgets

செய்திகள் அனைத்தும்

Definition List

Unordered List

Free counters!

Support