இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக சிவசேனா அமைப்பு மதவாதத்தை தூண்டி செயற்படுவதைப் போன்றே இலங்கையில் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்தை விதைத்து செயற்பட்டு வருவதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேனள தலைவர் மர்சூன் அகமட் லெப்பை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பு தனது அடுத்த இலக்காக கிறிஸ்தவ மக்களைக் குறிவைத்துள்ளது. இதனையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹரகமயில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவ்வமைப்பின் செயலாளர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றி தற்போது திருகோணமலை மறைமாவட்டத்திற்கு ஆயராக கடமையாற்றும் கலாநிதி பொன்னையா ஜோசப்பின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ; இலங்கையில் கடந்த முப்பது வருடங்களின் பின் ஏற்பட்டுள்ள சமாதானம் நிரந்தர சமாதானமாக மாறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மதவாதத்தைத் தூண்டி இலங்கையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை பிரச்சினையாக்குவதற்கு இந்த பொது பல சேனா அமைப்பு முற்படுகின்றது. இந்த பொது பல சேனா போன்ற மதவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராக சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment