எதிர்வரும் சில தினங்களில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல்கள் நங்கூரமிடவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை , இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கியதாக குறித்த போர்க்கப்பல்கள் நங்கூரமிடவுள்ளதா
எனினும் இலங்கையின் கடற்பரப்பில் குறித்த போர்க்கப்பல்கள் இலங்கையின் மேற்பார்வையின் கீழேயே செயற்படுமென இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனாவுடனான யுத்தப் பயிற்சிகளுக்காகவே ஈரானிய போர் கப்பல் தெற்காசிய பிராந்தியத்துக்கு வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஈரானிய கடற்படை தளபதி அட்மிரல் ஹபீபுல்லாஹ் சய்யாரி மறுத்துள்ளார்.
சீனாவுடன் பயிற்சிகளில் ஈடுபடவேண்டிய தேவை தமக்கு இல்லையென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மலாக்கா நீரிணையை தாண்டி பயணித்துக்கொண்டிக்கும் குறித்த போர்க்கப்பல்கள் அடுத்த சில தினங்களில் இலங்கை கடற்பரப்பை வந்தடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment